×

பாளை. சிறையில் கொலையுண்டவர் 72 நாட்களுக்கு பின் கைதியின் உடல் அடக்கம்: 4 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளை. அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் முத்துமனோ (27), அவரது கூட்டாளிகளான அருள்துரைசிங், மாதவன், சந்திரசேகர் ஆகியோரை களக்காடு போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் கடந்த ஏப். 22ம் தேதி பாளை. மத்திய சிறைக்கு மாற்றிய போது, அங்கிருந்த பிற கைதிகள் தாக்கியதில் முத்துமனோ இறந்தார். பிரேத பரிசோதனை முடிந்து 72 நாட்களாகியும் முத்துமனோவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே முத்துமனோவின் உடலை ஜூலை 2ம் தேதி  (நேற்று )மாலை 3 மணிக்குள் உறவினர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாவட்ட  நிர்வாகம் சார்பில் இறுதிச் சடங்கு நடத்தி முடிக்க   வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முத்துமனோவின் உறவினர்கள் மற்றும் போராட்ட குழுவினருடன் அதிகாரிகள் கடந்த 1ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முத்துமனோவின் உடலை பெற்றுக் கொள்வதாக சம்மதம்  தெரிவித்தனர்.முத்துமனோவின் உடல் அவரது தந்தை பாபநாசத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஐகோர்ட் வக்கீல் ஜான்சன்  நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உடலை இப்போது நாங்கள் பெற்றுக் கொண்டாலும்,  சிறைத் துறைக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். இந்த வழக்கை நாங்கள் வாபஸ் பெற மாட்டோம்’’ என்று தெரிவித்தார். அவரது உடலுக்கு தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 12.05 மணிக்கு முத்துமனோவின் உடல் அவரது சொந்த கிராமமான வாகைகுளத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி,  குமரி மாவட்ட எஸ்பிக்களின் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்….

The post பாளை. சிறையில் கொலையுண்டவர் 72 நாட்களுக்கு பின் கைதியின் உடல் அடக்கம்: 4 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Palai ,Nellai ,Nellai district ,Muthumano ,Vagaikulam ,Arulthuraisingh ,Madhavan ,Chandrasekhar ,SPs ,Dinakaran ,
× RELATED ‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’...